Friday, September 06, 2013

பொன்னியின் ‘செல்’வன்


பொன்னியின்  செல்வன் - முன் குறிப்பு
இந்தக் கதை பொன்னியின் செல்வன் கதையை கிண்டல் செய்யும் 

நோக்கத்துடன் எழுதப் பட்டதல்ல. பொன்னியின் செல்வன் கதையின் பால் 

ஏற்பட்ட ஈர்ப்பினாலேயே எழுதப் பட்டது.

- ஸ்ரீதேவி

தஞ்சாவூருக்கு அருகேயுள்ள சித்திரக்குடி என்னும் கிராமத்தில், சமீபத்தில்

நடந்த அகழ்வாராய்ச்சியில், Archeological Survey of Indiaவிற்கு, 1000

வருடத்திற்கு முந்தைய Hard disk கிடைத்துள்ளது. அதன் databaseஐ

ஆராய்ந்த போது, "CHOLACEL" என்ற செல்ஃபோன் கம்பெனியின் SMS

விபரங்கள் அதில் இருந்ததன. ASI வெளியிட்டுள்ள அந்த databaseல்

இருந்து, சில interesting SMSs இதோ....



Sender :- ஆதித்த கரிகாலன் 9900022222
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 03-08-0969


நண்பா! வந்தியத்தேவா!

என் தந்தை சுந்தரச் சோழரை, பழுவேட்டையர்கள் இருவரும்

சந்தேகிக்காதபடி, எவ்வாறாவது நேரில் சந்தித்து, கீழ்கண்ட Messageயை

காண்பிக்கவும். பின்பு, என் தங்கை குந்தவையை contact பண்ணவும். என்

சிற்றப்பா மதுராந்தகனை அடுத்த அரசனாக்க பழுவேட்டையர்கள் சதி

செய்கிறார்கள். எனவே கவனமாக காரியத்தை முடிக்கவும்.


Message Attached :-

Dad,

வீரபாண்டியனின் ஆபத்துதவிகளால், தங்களுக்கு அபாயம் அதிகரித்துள்ளது.

இராஜ்யத்திலும் குழப்பமான நிலை உள்ளது. எனவே, காஞ்சியில் நான்

கட்டியுள்ள பொன்மாளிகைக்கு உடனே கிளம்பி வரவும்.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- நந்தினி 9900040002
Date :- 08-08-0969


பெரிய பழுவேட்டையரின் இளைய ராணி நந்தினி தேவிக்கு,

தஞ்சை சாலையில், என்னுடைய குதிரை மீது தங்களின் பல்லக்கு

மோதியதே? நினைவுள்ளதா? வாணர் குல வந்தியத் தேவன் நான் தான். I

need one help. அரசர் சுந்தரச் சோழரை நேரில் சந்திக்க ஆசை. Help பண்ண

முடியுமா?

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 08-08-0969


கோட்டைக் காவலர் சின்ன பழுவேட்டையருக்கு Message அனுப்புகிறேன்.

அவர் உம்மை அரண்மனையினுள் செல்ல அனுமதி அளிப்பார். பதிலுக்கு

உம்மால் எனக்கும் சில காரியங்கள் ஆக வேண்டியுள்ளது. அரசரை மீட்

பண்ணியதும் என்னை நேரில் சந்திக்க வேண்டும். O.K.யா?

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- நந்தினி 9900040002
Date :- 08-08-0969


O.K.

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- சின்ன பழுவேட்டயர் 9900040003
Date :- 08-08-0969


வந்தியத்தேவன் என்பவர் அரசரை பார்க்க வருவார். Allow பண்ணவும்.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- ஆதித்த கரிகாலன் 9900022222
Date :- 10-08-0969


இளவரசே,

தங்கள் தந்தையை நேரில் Meet பண்ணி, Messageயை காண்பித்து விட்டேன்.

But, அரசர் காஞ்சிக்கு வரும் moodல் இல்லை. சி.பழுவேட்டையர் என்னை

ஒற்றன் என சந்தேகிக்கிறார். Anyway, நான் அவரை ஏமாற்றி தப்பி

விட்டேன்.

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 10-08-0969


வந்தியத்தேவரே,

தங்களை ஒற்றன் என்று சின்ன பழுவேட்டையர் சந்தேகிக்கிறார். என்னை

ஏமாற்றி விட்டீரோ? எனக்கு அலுவல் புரிய வருவீரா?

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- நந்தினி 9900040002
Date :- 10-08-0969


மேடம்,

நான் குந்தவைக்கு வேலை புரிய வந்துள்ளேன். So, தங்களுக்கு help பண்ண

முடியாமைக்கு வருந்துகிறேன். Anyway, Thanks for your help.

x-----x


Sender :- ஆதித்த கரிகாலன் 9900022222
Receiver :- குந்தவை 9900022244
Date :- 10-08-0969


குந்தவை,

எந்த வேலையையும் வெற்றிகரமாக முடிக்க கூடிய வீரன் வேண்டுமென்று

கேட்டிருந்தாயே? என் நண்பன் வந்தியத்தேவன், உன்னை விரைவில் contact

பண்ணுவான். His No is 9900077007.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 14-08-0969


சோழர் குல விளக்கு! பழையாறை இளவரசி! சேவூர் போரில்

வீரபாண்டியனின் தலை கொய்த ஆ.கரிகாலனின் அன்பு தங்கை!

பொன்னியின் செல்வர் அருள்மொழியின் பிரியமுள்ள தமக்கை! தங்கத்

தலைவி! சிங்கச் செல்வி! இளைய பிராட்டி குந்தவை தேவியாரே!

நான் வந்தியத்தேவன். இளவரசர் ஆ.கரிகாலரின் கட்டளையின் பேரில்

வந்துள்ளேன். I'm at your service.

தொடரும்...

10 comments:

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

கதை குழப்பமானது...நீங்க அதைவிட நல்லா குழப்புறீங்க..வாழ்த்துகள்...
அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்...

Anonymous said...

நல்ல கற்பனைப் புனைவு.
உண்மையென நம்பவைக்கும் வார்த்தைப் பரிமாற்றங்கள்.
அன்றைய நிகழ்வுகள் நவீன யுகத்துக்கும் பொருத்தமாக இருப்பது ஆச்சர்யம்.
நீங்க கலக்குங்க...
நன்றி!

குட்டன்ஜி said...

ஐடியா அபாரம்!

ஸ்ரீ தேவி said...

நன்றி குட்டன்!

ஸ்ரீ தேவி said...

original பொன்னியின் செல்வனை மீண்டும் மீண்டும் படியுங்கள் மாங்கனி நகர செல்லக் குழந்தை..! குழப்பாது!! நன்றியும், வாழ்த்துக்களும்...

ஸ்ரீ தேவி said...

** அன்றைய நிகழ்வுகள் நவீன யுகத்துக்கும் பொருத்தமாக இருப்பது ஆச்சர்யம்** நன்றி நண்பரே!!

Muthasen Kanna said...

Mersal ya... super

Muthasen Kanna said...

Mersal. .. kalakkal

கோபாலன் said...

https://paramarthaguru.wordpress.com/2007/12/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/

யோசிப்பவர் said...

கோபாலன்,

Thank You very much for notifying us. We didnt noticed it before.

ஸ்ரீதேவி இதை எழுதிய ஒரிஜினல் ரைட்டர். இந்தக் கதை அவருடைய புத்தகத்திலும் வந்துள்ளது நீங்கள் கொடுத்த தளத்தில் எழுதியவர் பெயரில்லாமல் இதைக் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள்.

- யோசிப்பவர்.